தமிழின் பெருமையையும், இலக்கியச் சிறப்பையும் பட்டிமன்றங்கள் மற்றும் சொற்பொழிவுகள் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழறிஞர் பத்மஸ்ரீ (தாமரைத் திரு) சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு, தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும்.
அவரது சிறப்புமிக்க தமிழ்ப்பணியையும், தனித்துவமான பேச்சாற்றலையும் இந்நேரத்தில் நினைவுகூர்ந்து, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் நான்காம் தமிழ்ச் சங்கம் - மதுரை, செந்தமிழ்க் கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.