மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் 04.03.2026 அன்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ' மணற்கேணி செயலி' குறித்த விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.போ.சாந்திதேவி அவர்கள் தலைமையேற்றார். 'மணற்கேணி' செயலியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மணற்கேணி செயலியின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ்நாட்டு மாணவர்கள் போட்டித்தேர்வுகளுக்கு எவ்வாறு மணற்கேணி செயலியைப் பயன்படுத்துவது என்பது குறித்தும் உரையாற்றினார். மணற்கேணி செயலியைத் தரவிறக்கம் செய்வது குறித்தும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று மதுரை மாவட்ட மணற்கேணி செயல்பாட்டாளர்களான ராதிகா, ரம்யா, நதியா ஆகியோர் விளக்கினர். நிகழ்ச்சிக்கு முன்னதாக கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் மா.செல்வத்தரசி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.