செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசைக் கல்லூரி
மதுரை
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
நாள் : 13.07.2026
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், போதைப்பொருள் தடுப்பு குழுவும் இணைந்து நடத்திய போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று 13.07.2026 காலை 11 மணிக்கு மன்னர் பாசுகர சேதுபதி குளிர்மை அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு செந்தமிழ்க் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.சுப்புலெட்சுமி அவர்கள் தலைமை வகித்தார். ஆங்கிலத் துறை தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர் கி.வேணுகா அவர்கள் முன்னிலை வகித்தார். மதுரை திலகர் திடல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு ஜேம்ஸ் ஜெயராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு ராஜபாண்டியன், மதுரை மாவட்ட போதை தடுப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் மதுவிலக்கு அமலாக்கத்துறையின் தலைமைக்காவலர் திரு வெங்கடேஷ்பாபு ஆகியோர் கருத்துரையாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும் போதைப் பொருளால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர்.
நிகழ்வில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு பாலசுப்பிரமணியன் திரு திலகர் காவலர் திரு கணேஷ் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் தொடக்கத்தில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் பா.நேருஜி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் பெ.இந்துராணி அவர்கள் நன்றி உரையாற்றினார். நிகழ்வும் முழுவதையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விரிவுரையாளர் வீ.அதிவீரபாண்டியன் தொகுத்து வழங்கினர்.
இந்நிகழ்வை தமிழ்த்துறை தலைவர் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இணைப்பேராசிரியர் முனைவர் பூ.பூங்கோதை அவர்களும் போதைப் பொருள் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் உதவிப்பேராசிரியர் முனைவர் சா கணேசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.