SENTHAMIL

SENTHAMIL

Home / Senthamil
SENTHAMIL

SENTHAMIL

செந்தமிழ் திங்களிதழ் — 1902 திசம்பர் மாதம் முதல் தற்பொழுது வரை மதுரை, நான்காம் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்டுவரும் இதழாகும். ஆய்வாளர்களால் மதிப்பாய்வு செய்யப்படும் ஓர் ஆய்விதழ் ஆகும். தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாடு ஆகிய துறைகளில் ஆய்வுகளையும், புலமைசார் பங்களிப்புகளையும் ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். தமிழ் மொழியையும், அதன் செழுமையான இலக்கிய மரபையும் குறித்த புரிதலையும், ரசனையையும் மேம்படுத்தும் வகையிலான நுண்ணறிவுகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு தளமாக இது கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு அமைகிறது. தமிழ் இலக்கியம், மொழியியல் ஆய்வுகள், பண்பாட்டுப் பகுப்பாய்வுகள் மற்றும் நவீன எழுத்துக்கள் ஆகியவை இதன் முதன்மை ஆய்வுப் பரப்புகளாகும்.

செந்தமிழ் இதழிலpd; முதல் நூற்றிப் பதினைந்து தொகுதிகள் (1902-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை) மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு தமிழ் மின் நூலகத்தின் www.tamildigitallibrary.in என்னும் இணையத்தில் காணக் கிடைக்கிறது. அனைவரும் விலையின்றிப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிப்ரவரி 2026
மார்ச் 2026

அறிவிப்புகள்

இன்றைய சிந்தனை

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் விளக்கம் : தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.